பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மீது கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
""கிளிநொச்சி தருமபுரம் முசிலம்பட்டியில், சந்தேகநபர் ஒருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை மாலை தேடிச் சென்றுள்ளனர். அப்போது குறித்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் இராணுவத்தினரும் இந்த நடவடிக்கையில் ஈடு படுத்தப்படுவர். இதேவேளை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தப்பிச் சென்ற நபர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment