0
பொதுவாக கடவுளை வழிபடும் ஆன்மீகத்தலங்களை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டிடமாக வடிவமைப்பதுதா பண்டை காலம் முதற்கொண்டு கடைபிடித்து வரும் ஒரு பழக்கம். ஆனால் போலந்து நாட்டில் உள்ள பாதிரியார் சர்ச் ஒன்றை முழுக்க முழுக்க மனித எலும்புக்கூடுகளினால் கட்டியுள்ளார். இந்த அதிசய மற்றும் அதிர்ச்சியான சர்ச்சை காண சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர்.

போலந்து நாட்டில் உள்ள Czermna என்ற நகரில் உள்ள ஒரு பாதிரியார்தான் இந்த எலும்புக்கூடு சர்ச்சை உருவாக்கியுள்ளர். இந்த சர்ச் 1776ஆம் ஆண்டு முதல் 1804 ஆம் ஆண்டுவரை காலம் எடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 

Silesian Wars என்ற போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எலும்புகளினால்தான் இந்த சர்ச் கட்டப்பட்டதாக அந்த சர்ச்சில் உள்ள ஆதாரங்கள் கூறுகின்றன. மனித உயிரின் மதிப்பை பிறர் அறிந்து கொள்வதற்காக இந்த சர்ச் கட்டப்பட்டதாகவும், இந்த சர்ச்சை ஒருமுறை வந்து பார்வையிட்டவர்கள் அடுத்து போர் என்ற வார்த்தையை கூட விரும்ப மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த சர்ச் வடிவமைக்கப்பட்டதாக அங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Post a Comment

 
Top