தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், மோடி ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்து உள்ளதாக வியகாந்த் அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழகம் போல் இல்லாமல் குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது என்றார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று சக்தி உருவாக வேண்டும் என விஜயகாந்த் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.
மோடி பிரதமராக வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என விஜயகாந்த் கூறினார்.
தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம் என கூறிய கட்சிகள் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த அதிமுக, திமுக அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்ற விஜயகாந்த் அதற்கு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Post a Comment