0
பெங்களூரில் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பெங்களூர் காமாட்சிபாளையா பகுதியை சேர்ந்தவர் விந்தியா. இவர் ‘மனத மரெயலி’ என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில், விந்தியாவுக்கு மஞ்சுநாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சமீபத்தில் சிம்லாவுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி உள்ளனர்.


 விந்தியா வேறு யாரிடமும் பேசினால் அது மஞ்சுநாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால் நடிகை விந்தியா நீரிழிவு நோய்க்கான 80 மாத்திரைகளை சாப்பிட்டதில் மயங்கி விழுந்துள்ளார்.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு பவுரிங் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து விந்தியாவின் தாயார் நாதம்மா கண்ணீர் மல்க கூறியதாவது, எனது மகள் விந்தியாவுக்கும், மஞ்சுநாத்துக்கும் பழக்கம் உண்டு. எனது மகள் சிமோகாவுக்கு சென்று வருவதாக கூறி சென்றாள். 


ஆனால், அவள் மஞ்சுநாத்துடன் சிம்லாவுக்கு சென்று இருக்கிறாள். ஆனால், நாங்கள் மஞ்சுநாத்திடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவள் தன்னுடன் வரவில்லை என்று தெரிவித்தார்.


எனது மகளை மஞ்சுநாத் சிகரெட்டால் சுட்டுக் கொடுமை செய்து உள்ளார். அவரது நடத்தை சரியில்லை. எனது மகள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மஞ்சுநாத் வற்புறுத்துகிறார். 


ஆனால், எனது மகளுக்கோ, எங்களுக்கோ அதில் விருப்பம் இல்லை என்றும் இதனால் எனது மகள் வேதனையில் தற்கொலைக்கு முயன்று இருக்கிறாள் எனவும் கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து காமாட்சிபாளையா பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

 
Top