0

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டுமே தவிர, இரங்கல் கூட்டங்களை நடத்தக் கூடாது என்று, சிங்கள படையினர் தெரிவித்துள்ளனர்.



இலங்கை இராணுவத்தினர் பேச்சாளர் ருவான் வணிக சூரிய வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் பெற்ற வெற்றி, சிங்களவர்களுக்கு மாத்திரம் இன்றி, தமிழ் மக்களுக்கும் பொதுவானது.


இதனை தமிழ் மக்கள் துக்கதினமாக அனுஸ்ட்டிக்க அரசாங்கமும், இராணுவமும் ஒருபோதும் இடமளிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top