0
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

இந்தியாவை பாதுகாக்க பாதுகாப்புத்துறையும், முப்படைகளும் வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினை நவீன மயமாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.


மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசு அமைந்தால், முப்படைகளுக்கு தேவையானதை நாங்கள் செய்து தருவோம். கடந்த 10 ஆண்டுகளை மத்திய அரசு வீணடித்துவிட்டது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.


எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் அரசின் தாரக மந்திரம். 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என இந்த அரசின் ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல, அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும்.


இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. இஸ்லாமியர்களின் கோரிக்கை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இருந்து பதில் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

 
Top