சீனாவில் உள்ள தம்பதியினர் சாலையில் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் செல்லும்பொது சிக்னல் சிகப்பு நிறத்தில் இருப்பதை கவனிக்காமல் சென்றதால் கார் ஒன்றினால் மோதப்பட்டு தூக்கியெறியப்படும் அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டு, பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீனாவில் உள்ள Hu Mou என்பவரும் அவருடைய மனைவியும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மூன்று சக்கர வாகனம் ஒன்றில் Zhejiang province, என்ற இடத்திலுள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தனர். இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டெ சென்றதால் சிக்னல் சிகப்பு நிறத்தில் இருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. எனவே அந்த பகுதியில் இருந்து மிகவேகமாக வந்த கார் ஒன்றினால் அவர்கள் சென்ற மூன்று சக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் அந்த தம்பதியினர் தூக்கி எறியப்பட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது சீன அரசு, போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கியவர்களின் மனதில் போக்குவரத்து விதிகளை மீறவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் ஏற்படாது என்பது மட்டும் நிச்சயம்.
Post a Comment