0
தமிழ் பேசும் சுதேச வைத்தியர்களின் நியமனத்தின் போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் கடமையாற்ற முடியும் என்று குறிப்பிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
 


இது இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் எம்மைப் புறக்கணிக்கும் செயல் என்பதற்கும் மேலாக இதனை ஓர் அடிப்படை உரிமை மீறல் செயலாகவே கருதுகிறேன்.


இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நா.ஐங்கரன் சுதேச வைத்திய அமைச்சரைக் கோரியுள்ளார்.


"புதிதாக வழங்கப்பட்ட நியமனத்தின் போது தமிழ் பேசும் சுதேச வைத்தியர்கள் பாதிக்கப்பட்டமை'' என்ற தலைப்பில் தவிசாளர் சுதேச வைத்திய அமைச்சர் சலிந்த திசநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ் பேசும் சுதேச வைத்தியர்களுக்கு அண்மையில் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனம் தொடர்பில் தமிழ் பேசும் சுதேசவைத்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியத் தரப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் மேற்படி நியமனத்துக்கான விண்ணப்பம் கோரப்படும் போது தீவு முழுவதற்குமான சேவை என்று கோரப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் தமிழ் பேசும் சுதேச வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மட்டுமே கடமையாற்ற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் குறித்த வைத்தியர்களுக்கான நியமனம் அண்மையில் ஆயுள் வேத ஆணையாளரால் வழங்கப்பட்டது. இதேவேளை சுதேச மருத்துவத்துறை பட்டதாரிகளை மொழி ரீதியாக நியமனம் செய்யும் நடை முறையை ரத்துச் செய்யும் (திருத்தப்பட்ட) வர்த்தமானி அறிவித்தல் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த நிலையிலும் கூட மொழி ரீதியாக வடக்கு, கிழக்கு பகுதியில் மட்டுமே கடமையாற்ற முடியும் என்று தமிழ் பேசும் சுதேச வைத்தியர்களுக்கு குறிப்பிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு கூறப்பட்டமையானது இந்த நாட்டில் மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் எம்மைப் புறக்கணிக்கும் செயல் என்பதற்கு மேலாக ஓர் அடிப்படை உரிமை மீறலாகவே கருதுகின்றேன்.


இந்த விடயம் தொடர்பில் தாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.


இந்த நிலை தொடருமானால் நாட்டில் இனரீதியான புறக் கணிப்பு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு வழங்கும் சந்தர்ப்பத்திலும் உள்ளது என்பது தெளிவாக்கப்படும்.


இந்த நிலையில் தொடர்ச் சியாக எதிர்காலத்திலும் மொழி அடிப்படையில் சுதேச மருத் துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.


ஆனால் குறைந்த அளவான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே வாய்ப்பு உருவாகும். இத னால் எதிர்காலத்தில் இவ்வா றாக மருத்துவத்துறையில் கற் றவர்கள் கூட வேலை வாய்ப் பற்ற நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கருதுகின்றேன் என்றுள்ளது.

Post a Comment

 
Top