உள்நாட்டு யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், இலங்கையில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழக்கூடிய ஆபத்தொன்று ஏற்றபட்டுள்ளதென கனடா எச்சரித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள கனேடிய தூதரகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மத்தியூ ரசெல் இன்னர் சிற்றி பிரஸில் தான் எழுதியுள்ள விரிவான அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றமை குறித்த செய்திகளை ஐ.நா. வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா மறுத்துள்ளதாகவும் குறித்த சில அமைப்புக்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருவதனையும் வேறுபட்ட அமைப்புகளால் அவை இடித்துரைக்கப்பட்டு இலங்கை குறித்து தவறான அபிப்பிராயமொன்றை தோற்றுவிற்று வருவதனையும் உதாரணப்படுத்தினார்.
மேற்படி அமர்வில் கனேடிய வதிவிடப் பிரதிநிதி கிலர்மோ ரிஷ்சின்ஸ்கி உரையாற்றுகையில், உள்நாட்டு யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கை எதுவும் உகந்த முறையில் எடுக்கப்படாததால் இலங்கையில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழக்கூடிய ஆபத்து நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் விஜயத்தையடுத்து சிவில் சமூகத்தினர் சதா தொந்தரவுகளுக்கு ஆளாகியிருந்தமை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேற்படி அமர்வில் நோர்வே, அமெரிக்கா, பிரத்தானியா, நைஜீரியா, ஜப்பான், பாகிஸ்தான், மொன்டினெக்ரோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேற்படி அமர்வில் நோர்வே, அமெரிக்கா, பிரத்தானியா, நைஜீரியா, ஜப்பான், பாகிஸ்தான், மொன்டினெக்ரோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இது குறித்து தென்னாபிரிக்க பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பொருட்டு மேற்படி கவலை தரும் விடயத்தை தமது தலைநகருக்கு தெரியப்படுத்தபோவதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment