0
போர்ச்சுகீஸ் ஏர்லைன்சை சேர்ந்த விமானமான ஏ330, 258 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் பிரேசிலியாவிலிருந்து லிஸ்பன் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பிரேசிலியா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்கு பின் அதன் ஒரு எஞ்ஜின் பறவை ஒன்றை துரதிருஷ்டவசமாக விழுங்கியது.


விமானத்தின் எஞ்ஜினில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த விமானி அந்த விமானத்தை பிரேசிலியாவிற்கே மீண்டும் திருப்பி அவரசமாக தரையிறக்கினார். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய செய்தி தொடர்பாளரான கேனியல்லோ கூறியுள்ளார்.


பின்னர் பயணிகள் அனைவரும் இன்றிரவு லிஸ்பனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top