0
64-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 86-47 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகத்தை எளிதில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.


இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, சர்வீசஸ் அணியை எதிர்கொள்கிறது. பெண்கள் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 50-90 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது

Post a Comment

 
Top