0
கடந்த சில வருடங்களாக உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தை இழந்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த வருடம் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.


அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் கடந்த 2013ஆம் ஆண்டு கோடீஸ்வரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது இதில் பில்கேட்ஸ் முதலிடம் வகிக்கிறார்.  


கடந்த ஆண்டு ஆண்டுகளாக தனது முதலிடத்தை இழந்திருந்த அவர் தற்போது முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் பில்கேட்ஸ்தான் முதலிடத்தில் இருந்தார்.

 
Forbes நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீஸ்வரர்களை வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடுவது வழக்கம். கடந்த 2013ஆம் ஆண்டி கோடீஸ்வரர்களின் பட்டியலை நேற்று மாலை அமெரிக்காவில் வெளியிட்டது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு $76 பில்லியன் ஆகும். கடந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு $67 பில்லியன் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்தப் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட பல இந்தியக் கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி $18.6 பில்லியன் சொத்து மதிப்பை கொண்டு, உலகின் 40-வது பணக்காரராக உள்ளார். அவரது சகோதரர் அனில் அம்பானி $5 பில்லியன் சொத்துடன் 281-வது இடத்தில் உள்ளார்.

 
மற்றொரு இந்தியரான தொழிலதிபர் லஷ்மி மிட்டல் $16.7 பில்லியன் சொத்து மதிப்பு பெற்று பட்டியலில் 52-வது இடத்தில் உள்ளார்.

 
இந்த வருடம் அதிகம் வருமானத்தை பெற்றவர் வரிசையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூசர்பெர்க் உள்ளார். கடந்த வருடம் $13.3 பில்லியன் சொத்து மதிப்புடன் இருந்த இவர் இவ்வருடம் இருமடங்கிற்கும் அதிகமாக சம்பாதித்து $28.5 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டுள்ளார்.

 
உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் 20 இடங்களை பெற்ற கோடீஸ்வரர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள்:


1     Bill Gates     $76 Billion      Microsoft     United States
2     Carlos Slim Helu     $72 Billion        Telecom     Mexico
3     Amancio Ortega     $64 Billion         Retail     Spain
4     Warren Buffett     $58.2 Billion        Berkshire Hathaway     United States
5     Larry Ellison     $48 Billion       Oracle     United States
6     Charles Koch     $40 Billion        Diversified     United States
6     David Koch     $40 Billion          Diversified     United States
8     Sheldon Adelson     $38 Billion      Casinos     United States
9     Christy Walton     $36.7 Billion         Walmart     United States
10     Jim Walton     $34.7 Billion          Walmart     United States
11     Liliane Bettencourt     $34.5 Billion          L’Oreal     France
12     Stefan Persson     $34.4 Billion        H&M     Sweden
13     Alice Walton     $34.3 Billion        Walmart     United States
14     S. Robson Walton     $34.2 Billion        Walmart     United States
15     Bernard Arnault     $33.5 Billion          LVMH     France
16     Michael Bloomberg     $33 Billion       Bloomberg LP     United States
17     Larry Page     $32.3 Billion        Google     United States
18     Jeff Bezos     $32 Billion        Amazon.com     United States
19     Sergey Brin     $31.8 Billion         Google     United States
20     Li Ka-shing     $31 Billion         Diversified     Hong Kong

Post a Comment

 
Top