0
உணர்வுகள் தான் தலைமுறையின் வெற்றி என்பதே பாலுமகேந்திராவின் தாரக மந்திரம் என இயக்குனர் தே.தேவானந் தெரிவித்தார்.


தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா என்ற தலைப்பிலான நினைவுப் பேருரையும் அவரது திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வும் இன்று இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.


ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


இந் நினைவுப் பேருரை 3 நாட்கள் காலை 8.30 முதல் மாலை 3.30 வரை இடம்பெறவுள்ளது.


பாலுமகேந்திராவின் சினிமா மீதான ஆளுமை பற்றி ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர் கருத்து தெரிவிக்கையில்,


பாலுமகேந்திரா 40 வருடகாலமாக  சினிமாவில் தன்னை இணைத்துகொண்டதுடன் இதுவரை 27 படங்களை இயக்கியுள்ளார்.


இவருடைய தலைமுறை என்ற படத்தில் 250 வருடம் பழமைவாய்ந்த ஒரு வீட்டினை அடிப்படையாக வைத்து எடுத்துள்ளார் இப் படம் பல உணர்வுகளை எமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.


இதன் மூலம் அவருடைய உணர்வு இன்றைய படங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. எனவே உணர்வுகள் தான் தலைமுறையின் வெற்றி என்பதே பாலுமகேந்திராவின் தாரக மந்திரமாக இருந்தது.


மேலும் இயற்கை ஒளியினை தனது படங்களில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் என தெரிவித்தார்.

Post a Comment

 
Top