தொடர்ச்சியாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஸ்மார்ட்
கைப்பேசிகள், டேப்லட்கள் என அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனம்
குழந்தைகளுக்கான டேப்லட் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளது.
Galaxy Tab 3 எனும் இந்த புதிய டேப்லட்டினை இந்த மாதத்தில் அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது.
கூகுளின் Android 4.2.2 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த
டேப்லட் ஆனது 7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டதாகவும், 1.2GHz வேகத்தில்
செயலாற்றவல்ல Processor, 1GB RAM, 2MP கமெரா மற்றும் 8GB சேமிப்பு நினைவகம்
என்பவற்றினை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இதன் விலையானது 175 டொலர்கள் ஆகும்.

Post a Comment