தமிழர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை சிங்களப் படையினரின் துணையோடு சீரழிக்கின்ற செயற்பாடுகளில் தமிழ் அடிவருடிகள் சிலர் ஈடுபட்டு வருவதாக தாயகத்திலிருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறிப்பாக, போரால் மிகவும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இவ்வாறான செயல்கள் அதிகம் இடம்பெறுவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் யாழ்.போதனா வைத்தியசாலைகளிலும் பணியாற்றுகின்ற சில மருத்துவர்கள்கூட கிசிச்சையென்ற பெயரில் இளம் பெண்களைத் தமது விடுதிகளுக்கு அழைத்து பாலியல் உல்லாசம் அனுபவிக்கின்றனர்.
இந்த வகையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவரான கணேசமூர்த்தி என்பவர் இளம் பெண்ணொருவரைப் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியுள்ள தகவல்களை இங்கே நாங்கள் பதிவு செய்கின்றோம்.
மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் உளவளத்துணை தொடர்பான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15.02.2014 அன்று சிகிச்சைக்காகச் சென்ற மேற்படி தாயிடம் அவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்த உளவளத்துணைப் பணியாளர் கணேசமூர்த்தி என்பவர் அந்தத் தாயின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்துக்கு உதவுவது போன்று நடித்துள்ளார்.
அவருடைய இளம் வயதுடைய மகளுக்கு வைத்தியசாலையில் ஒரு வேலை பெற்றுத் தருவதாகவும் அவருடைய கல்வித் தகமைகளுடன் மறுநாள் 16 ஆம் திகதி மருத்துவமனைக்குப் சமீபமாக உள்ள இசுலாமிய விடுதிக்கு அருகிலுள்ள தனது அலுவலகத்திற்கு மகளை அனுப்பிவைக்குமாறும் கூறினார்.
அந்த மோசமானவனை நம்பிய அந்தத் தாய் தனது மகளை 16 ஆம் திகதி காலை அனுப்பிவைத்தார். அந்த இளம் பெண் அங்கு சென்றபோது தனது அலுவலகம் என்று கூறி ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கணேசமூர்த்தி, சிறிது நேரம் உரையாடி விட்டு குளிர்பானம் ஒன்றைக் குடிக்க கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பின்னர் அந்தப் பெண் மயக்கமடைந்த பின்னர் இதனைப் பயன்படுத்தி கணேசமூர்த்தி அப்பெண் மீது தனது காம இச்சையைத் தீர்த்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
வேலை தேடிச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாமையால் பதறியடித்த அந்த ஏழைத் தாய், அப் பெண்ணின் காதலனை அழைத்து அவரை தேடும்படி கூறியுள்ளார். இந் நிலையில் மறு நாள் காலையிலேயே பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளார். நடந்த விபரீதத்தை கேட்டறிந்த தாயார், வைத்தியசாலை சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் எவருமே கணேசமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்தவில்லை.
இதுபோன்ற பல செயல்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அங்குள்ள சமூக நலன்விரும்பிகள் எங்களுக்கு அடிக்கடி அறியத் தந்தவண்ணமுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் எமது இணையம் திரட்டிக்கொண்டிருக்கின்றது.
விரைவில் அவர்களின் விபரங்கள் வெளியிடப்படும். அவர்கள் அனைவரின் புகைப்படங்களுடன் எமது தளம் அவர்களின் விபரங்களை தரவேற்றவுள்ளது. எனவே, அவர்கள் இனியாவது திருந்தி வாழ முயற்சி செய்வது நல்லது என்று இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
Post a Comment