நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் சிறப்பான முறையில் வாழ்ந்து வந்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொரக்கானே பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் பொருளாதார கஷ்டங்கள் இன்றி சிறந்த முறையில் வாழ்ந்து வந்தனர்.
போர் முடிவடைந்து 5 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் வழங்கவில்லை. மக்களை சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.
அத்துடன் ஊழல், மோசடிகளில் இந்த அரசாங்கம் மூழ்கியுள்ளது. நாட்டில் விற்பனை செய்ய எதனை இந்த அரசாங்கம் மீதம் வைக்கவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மத்திக்கு செல்ல முடியவில்லை. இதனால் மக்களை ஏமாற்ற மற்றுமொரு பொய்யை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
ஆட்சியாளர்கள் தற்போது ஜெனிவா பற்றி பேசுகின்றனர். ஆட்சியாளர்களை மின்சார நாற்காலியில் அமர்த்த போகின்றனராம். இவை மக்களின் அனுதாபத்தை பெற கூறும் கோமாளி கதைகள்.
இலங்கையின் இன்றைய அரசாங்கத்திற்கு அயல் நாடான இந்தியா உதவியளிப்பதில்லை. அந்த அளவுக்கு நாட்டை சீரழித்துள்ளனர்.
பெரிதாக சீனாவை பற்றி பேசும் அரசாங்கம், அந்த நாட்டிடம் இருந்து பெருமளவில் கடனை பெற்று வருகிறது. அவற்றை மோசடி ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கின்றனர். பெற்ற கடனை மக்களின் பணத்தை கொண்டே திருப்பி செலுத்துகின்றனர். இது மிகப் பெரிய அநியாயம்.
திருடர்களுக்கு நாட்டை தொடர்ந்தும் கொள்ளையிட இடமளிக்க முடியாது. இந்த திருட்டுக் கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்.
நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே முன்னேற்ற முடியும். இதனை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்றார்.

Post a Comment