0
வட மாகாணத்தில் பாரியளவில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், வர்த்தகர் ஒருவரே இவ்வாறு காடுகளை அழித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.


வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக் கொண்டு, இவர் காடுகளை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சுமார் 700 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எவ்வாறெனினும் காடழிப்பதற்கு அனுமதியளிக்கவில்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Post a Comment

 
Top