0
அமெரிக்காவில் உள்ள டெல்பியா அருங்காட்சியகத்தில், 1550ம் ஆண்டைச் சேர்ந்த மதுரை இந்து மண்டபம் இடம்பெற்றுள்ளது.


1876ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2 லட்சத்து 27 ஆயிரம் கலைப்பொருட்களுடன், ஓவியம், சிலைகள், காகித வேலைப்பாடுகள், புகைப்படங்கள், அலங்கார கலைகள், துணி ரகங்கள், மற்றும் கட்டட கலை தொடர்பான 200 பகுதிகளைக் கொண்டுள்ளது.


அருங்காட்சியகத்தின் 2வது தளத்தில் உள்ள இந்த இந்து மண்டபத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிலைகளும், கிருஷ்ணர், அனுமர், கருடர் ஆகியோருடைய சிலைகளும் இடம் பெற்றுள்ளன.


மேலும் இந்த அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நடராஜர் வடிவில் சிவன், ராமர், துர்கை, நடன கணேசர், கார்த்திகேயர், காளி, பைவரவர், இந்திரன், காமதேனு, நந்தி, சூர்யன் ஆகிய சிலைகளும் உள்ளன.


இந்து மண்டபம் மற்றும் சிலைகள் பராமரிக்கப்படுவதைப் பாராட்டியுள்ள பிரபஞ்ச இந்து சமதாயத்தின் தலைவர் ராஜன் ஜெட், இது போன்று அமெரிக்காவில் உள்ள இதர அருங்காட்சியகங்களும் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களையும், கலைப் பொருட்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.





Post a Comment

 
Top